பாஜக பெண்களை கற்பழித்த திரிணாமுல் காங்., தொண்டர்கள் : மம்தா தோல்வியால் ஆதரவாளர்கள் வெறியாட்டம்!!

4 May 2021, 1:00 pm
mamata 1- updatenews360
Quick Share

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில், பாஜக பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 213 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்றிருந்தாலும், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சென்று பாஜகவில் இணைந்து போட்டியிட்ட சுவேந்தி அதிகாரியிடம் சில வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பறிபோனது.

இதனால், ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவின் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி, மேற்கு வங்க மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

Rape_UpdateNews360

இந்த நிலையில், நன்னூர் தொகுதியில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இருந்த இரு பெண்களை தூக்கிச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவர்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, திரிணாமுல் தொண்டர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில், ஒருவரை தற்போது வரை காணவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நன்னூர் தொகுதியில் மட்டும் 12 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களை திரிணாமுல் தொண்டர்கள்

அதேபோல, மம்தா போட்டியிட்டு தோல்வியடைந்த நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட கெண்டமரி கிராமத்தில், பாஜகவிற்கு ஆதரவளித்த இஸ்லாமிய பெண்களை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் இழுத்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைந்த நிலையில், இதுபோன்று அராஜகத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்களை, மம்தா பானர்ஜி கண்டிக்காதது அம்மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 225

0

0

Leave a Reply