தமிழக அகழாய்வில் கண்டறியப்பட்ட பிரம்மாண்டம்: கீழடிக்கு கிடைத்த பெருமை…..!!!!

Author: Aarthi
6 October 2020, 10:47 am
keeladi pride - updatenews360
Quick Share

சிவகங்கை: கீழடி அகழ்வாய்வில் 32 அடுக்குகள் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவங்கி செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் கடந்த 14ம் தேதி 2 அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 30ம் தேதியுடன் நிறைவடைந்த அகழாய்வில் 16 அடுக்குகள் வரை கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் உள்ளன. கீழடியில் இதுவரை நடந்த அகழாய்வில் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன.

6ம் கட்ட அகழாய்வு பணியில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. இது தமிழகத்தின் 2வது பெரிய உறைகிணறு என கருதப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூரில் 28 அடுக்குகளுடன் வெளிப்பட்ட உறைகிணறுதான் தமிழக அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பெரிய உறைகிணறு என இதுவரை அறியப்பட்டிருந்தது.

தற்போது, 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டதன் மூலம், தமிழக அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய உறைகிணறு என்ற பெருமை கீழடிக்கு கிடைத்துள்ளது.

Views: - 46

0

0