இந்து கோவில்களுக்கான ஆலோசனைக் குழு தலைவர் பொறுப்பு : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முற்போக்கு பிராமண சங்கம் எதிர்ப்பு…!!

Author: Babu Lakshmanan
26 June 2021, 10:35 am
stalin - updatenews360
Quick Share

பெரிய இந்து கோயில்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்க கூடாது என்று முற்போக்கு பிராமண சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, அந்த சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் பெரிய இந்து கோயில்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்று செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN HR & CE சட்டம் 10வது பிரிவின்படி பிறப்பால் இந்துவாக இருப்பவரும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவரும், கடவுள் நம்பிக்கை கொண்டவரும் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையில் பொறுப்பேர்க்க முடியும் .

முதலமைச்சர் தன்னை ஒரு நாத்திகர் மற்றும் இந்து கடவுள்களின் மேல் நம்பிக்கை இல்லாதவராக பகிரங்கமாக அறிவித்தவர். எனவே, தகுதி இல்லாத ஒரு நபர் தலைமையில் இந்த குழு இருப்பது சட்டவிரோதமானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, முதலமைச்சர் பக்தர்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். முற்போக்கு பிராமண சங்கம் மாண்புமிகு முதலமைச்சரை ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதைத் தவிர்க்குமாறு கோருகிறது. இந்த கோரிக்கயை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிபிரிவுக்கும். தமிழக ஆளுநருக்கும் சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 366

0

0