விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : ரொக்கம், தங்கம் பறிமுதல்

Author: Babu Lakshmanan
18 October 2021, 7:41 pm
Quick Share

புதுகோட்டை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் 23 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, குவாரி மற்றும் அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2013 முதல் 2021 வரை தமிழக அமைச்சரவையில் இருந்த சி.விஜயபாஸ்கர் குவாரி மற்றும் அறக்கட்டளை துவக்கி பல கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை 6 மாவட்டங்களில் 43 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் ரெய்டு நடத்தினர். திருவேங்கைவாசல் குவாரியிலும், சகோதரர் உதயக்குமார் , மனைவி ரம்யா, தந்தை , உதவியாளர் குருபாபு ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், ரொக்கம் ரூ.23,85,700/-, தங்க நகைகள்‌ 4870 கிராம்‌ (4.87 கிலோ), 136 கனரக வாகனங்களின்‌ பதிவு சான்றிதழ்கள்‌ மற்றும்‌ சொத்து பரிவரித்தனை தொடர்பான ஆவணங்கள்‌ கண்டறியப்பட்டு, 19 ஹார்டு டிஸ்குகள்‌ மற்றும்‌ முக்கியமான ஆவணங்கள்‌ கைப்பற்றப்பட்டன, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Views: - 149

0

0