நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்: நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை

Author: Udayaraman
2 August 2021, 9:42 pm
DMK_Stalin_UpdateNews360
Quick Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த திமுக இந்தமுறை ஆளுங்கட்சியாக அரியணையில் அமர்ந்தது. அத்துடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய தினமே மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 60

0

0