டெல்லியில் திடீர் குண்டுவெடிப்பு… பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் அதிர்ச்சி சம்பவம்….!!!
29 January 2021, 7:03 pmடெல்லி : டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீரென குண்டு வெடித்த சம்பவத்தால் பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என தலைநகர் டெல்லி பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா கேட் அருகே உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே 50 கி.மீட்டருக்குள் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு வெடித்த பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும், அந்த சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, குண்டுவெடித்த பகுதியில் வேறு ஏதேனும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குண்டுசெயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், டெல்லியில் வெடிகுண்டு வெடித்த சம்பவம்
0
0