இந்தியா முழுவதும் ஒலித்த ‘ப்ரீத்தி சவுத்ரி’..!!! ஏன்…? எதற்காக…?

26 January 2021, 12:50 pm
Preeti-Choudhary - updatenews360
Quick Share

டெல்லி : டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ப்ரீத்தி சவுத்ரி என்ற பெண்ணின் பெயர் இந்தியா முழுவதும் ஒலித்தது.

நாட்டின் 72வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், அணிவகுப்பில் இந்தியாவின் பாதுகாப்பு ஆயுதங்கள் பேரணியாக வலம் வந்தன. இந்திய ராணுவத்தின் முக்கிய பங்காற்றும் டி-90 பீஷ்மா டாங்க் அணிவகுப்பில் பங்கேற்றது. பிரமோஸ் ஏவுகணை, பினாகா மல்டி லாஞ்சர் ராக்கெட் உள்ளிட்டவை இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.

நவீன ரேடார் மற்றும் டிஜிட்டல் முறையில் வெடிபொருட்களை கட்டுப்படுத்தும் அமைப்பை கொண்ட ஷில்கா ஆயுத அமைப்பு, கேப்டன் ப்ரீத்தி சவுத்ரி தலைமையில் அணிவகுத்து சென்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்றதன் மூலம், ராணுவம் சார்பில் பங்கெடுத்த ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Preeti-Choudhary 2 - updatenews360

பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வரும் பெண்களுக்கு, இந்திய ராணுவத்திலும் வாய்ப்பு அளிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி கொடுத்தது. அதன்படி, கப்பற்படை, காலாற்படை மற்றும் விமானப்படைகளில் அடுத்தடுத்து பெண்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணுவத்தின் அணிவகுப்பில் பெண் ஒருவர் தலைமையேற்று நடத்திய நிகழ்வு இந்தியர்களை பெருமையடையச் செய்துள்ளது.