அமைச்சர் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு? அமித்ஷா போட்ட புது கணக்கு!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 8:47 am
Udhaya - Updatenews360
Quick Share

சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு ஆளானது. உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து தவறான, ஆபத்தான, கருத்துக்களை வெளியிட்டு தேச ஒற்றுமைக்கும், மக்களின் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி மத வேற்றுமையை உருவாக்கி மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்து மதத்தின் புனிதத்தை விளக்கக்கூடிய சனாதன தர்மம் மனித வாழ்வியலின் அற்புத நெறிமுறைகளை விளக்கும் பெருமைமிகு உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மானுட தத்துவம். இது குறித்து படித்து தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு கருத்துக்கள் கூறலாம்.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் சனாதன தர்மம் குறித்து எதுவும் தெரியாமல், உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்க முயலும் திமுக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

அரசியல் சுயநலத்திற்காக இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதையும், இந்துக்களிடைய பிரிவினைவாதத்தை தூண்டுவதையும் இனி அனுமதிக்க கூடாது. தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், மதக் கலவரத்தை , வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் உதயநிதி மீதும், மத வேற்றுமையை உருவாக்குவதில் பரப்பப்பட்ட இந்த பிரிவினைவாத செய்தியின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும்

மேலும் அமைச்சர் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் நடத்த ஏதேனும் சரி நடந்ததா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 330

0

0