முதலமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் : ரூ.3.60 கோடி பறிமுதல் செய்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 2:46 pm
ranga
Quick Share

முதலமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் : ரூ.3.60 கோடி பறிமுதல்.. புதுவையில் பரபர!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதையும் மீறி கொண்டு சென்ற ரொக்கங்கள், நகைகள், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது வரும் ஜுன் 4வரை தொடரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: பாஜகவுக்கு ‘ஒரு’ ஓட்டு போட்டால் ‘இரண்டாக’ பதிவு : பதறிய எதிர்க்கட்சிகள்.. நீதிமன்றம் ACTION!

இந்த நிலையில் புதுச்சேரி ஜான்சி நகரில் ஒரு வீட்டில் இரண்டரை கோடி பணம் இருப்பதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ஜான்சி நகரில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முருகேசன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுவதால் பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 291

0

0