‘நீ வேணுணா சண்டைக்கு வா’: சிறுத்தையிடம் மல்லுக்கட்டிய பூனை…தீயாய் பரவும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 4:53 pm
Quick Share

நாசிக்: பூனையை பிடிப்பதற்காக கிணற்றுக்குள் வந்த சிறுத்தையை நேருக்கு நேர் எதிர்கொண்ட தைரியசாலி பூனையின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கிணற்றின் அருகே சுற்றித்திரிந்த பூனையைப் பிடிக்க சிறுத்தை முயன்றுள்ளது. பூனை கிணற்றினுள் சுவரின் விளிம்பிக்குச் சென்று பதுங்கியது. அதைத் துரத்திச் சென்ற சிறுத்தையும் தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்தது.

பின், பூனை நின்ற சுவரின் விளிம்புக்கு வந்த சிறுத்தை பூனையைப் பிடிக்க முயற்சி செய்தது. அப்போது, அந்தப் பூனை சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் மோதுவதுபோல் நின்றது. சிறுத்தை எவ்வளவு சீண்டினாலும் பூனை அதனை எதிர்த்து பதிலுக்கு சீறியது.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில், பூனையைத் துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார்.

Views: - 295

0

0