சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ல் தொடக்கம் (முழு அட்டவணை)

2 February 2021, 5:53 pm
CBSE - updatenews360
Quick Share

டெல்லி : 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை கல்வி நிறுவனங்கள் முன்னெடுத்தன. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் கல்வியை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவை பிறப்பித்தது. இதனால், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது

எனவே, எதிர்வரும் தேர்வுகளில் மாணவர்களின் வசதிக்காக பாடத்திட்டங்களை குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் முன்கூட்டியே நடைபெற இருப்பதால், மே மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியது.

அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு மே 4 முதல் ஜுன் 7 வரையும், 12ம் வகுப்பிற்கு மே 4 முதல் ஜுன் 11 வரையும் பொதுத்தேர்வு நடத்தப்படும் அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், 10ம் வகுப்பிற்கான தேர்வுகள் அனைத்தும் காலை நேரத்தில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 12ம் வகுப்பிற்கான தேர்வில் சில பாடங்களுக்கான தேர்வுகள் மதியமும் நடத்தும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை : –

12ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை :-

Views: - 0

0

0