‘இந்தி தெரியாது போடா’… பின்னணியில் பிரபலங்கள் இருக்க காரணம் இதுதானா..? முகத்திரை கிழிந்த தி.மு.க.!!

7 September 2020, 7:57 pm
yuvan1 - updatenews360
Quick Share

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆளும் அதிமுக அரசும் இருமொழிக் கொள்கைதான் எங்களது நிலைப்பாடு என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டது.

இதனால் ஏமாற்றம் அடைந்த திமுக, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதைவிட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என நினைத்துக் கொண்டு, மும்மொழி விவகாரத்தை பெரிது படுத்தி வருகிறது.

தி.மு.க.விற்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிரிஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது சகோதரர் மணிகண்டன், பாக்கியராஜ் மகன் சாந்தனு, அவரது மனைவி கிகி உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்களை அணிந்திருந்தனர்.

yuvan - updatenews360

இந்த பிரபலங்களுக்கு தமிழ் மீது பற்று இருப்பது ஒருபுறம் இருந்தாலும், தற்போது டீசர்ட் அணிந்து இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தி எதிர்ப்பு விவகாரத்தை அரசியல் தலைவர்கள் மூலமாக கையில் எடுத்தால் போதிய பிரபலம் கிடைக்காது என்பதை உணர்ந்து, மறைமுகமாக சினிமா பிரபலங்களை வைத்து தி.மு.க. காய் நகர்த்தியுள்ளது.

நடிகர் சிரிஷின் தந்தை தி.மு.க. எம்.பி. கனிமொழியின் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரை வைத்து சினிமா பிரபலங்களின் மூலம் இந்தி விவகாரத்தை கையில் எடுக்க, தி.மு.க. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இந்தி எதிர்ப்பு டீசர்ட் அணிந்து வீடியோ மூலம் சில வசனங்களை பேசவே அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், பாலிவுட் பட வாய்ப்புகள் உள்ளிட்ட பிஸினஸ் டீல்களினால் அவர்கள் வீடியோவை எடுக்க மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ எடுக்காவிட்டாலும் பரவாயில்லை வெறும் இந்த டீசர்ட்-ஐயவாது போட்டுட்டு போஸ் கொடுங்க, மத்த வேலையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் என பிரசாந்த் கிஷோரின் இசைவின் பேரில் நடந்த போட்டோஷுட்தான் அவை என்பது தற்போது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவையெல்லாவற்றிற்கு மேலாக இந்தி எதிர்ப்பு டீசர்ட் அணிந்து போட்டுள்ள யுவன்சங்கர் ராஜாவின் பதிவிற்கு, தி.மு.க. எம்.பி. கனிமொழி ‘இன்டெர்ஸ்டிங்’ என பதிலளித்திருப்பது இவையனைத்திற்கும் சாட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரால் திட்டமிட்டு டிரெண்டாக்கப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக்கிற்கு போட்டியாக ‘திமுக வேணாம் போடா’ என்னும் ஹேஸ்டக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0