‘சாதிப் பெயரை நீக்க மாட்டேன்’ : ஜோ பிடன் குழுவில் இடம்பிடித்த தமிழக மருத்துவர் செலின் கவுண்டர் கூறியதன் பின்னணி..!!

11 November 2020, 11:06 am
Celine-Gounder- updatenews360
Quick Share

சென்னை : தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயரை நீக்க மாட்டேன் எனக் கூறிய ஜோ பிடன் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக மருத்துவர் செலின் கவுண்டர் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல் குழுவை அவர் அமைத்துள்ளார். அதில், இந்திய வம்சாவளியான செலின் கவுண்டர் (43) இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும், காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குநராகவும், பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

இப்படி பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய செலின் கவுண்டரின் தந்தை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவராவர்.

இந்த நிலையில், பெயருக்கு பின்னால் எதற்காக உங்களின் ஜாதிப் பெயரை போட்டுள்ளீர்கள் என தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் செலின் கவுண்டரிடம் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு செலின் கவுண்டர் பதிலளிக்கையில், “என் தந்தை 1970களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார். அவரது பெயரான நடராஜ் என்பதை அழைப்பதில் இங்குள்ளவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், எளிதாக அழைக்க வசதியாக கவுண்டர் என மாற்றம் செய்துள்ளேன். எனக்கு திருமணமான பிறகு, இந்தப் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. இது என் வரலாறு, எனது அடையாளம்,” எனக் கூறியுள்ளார்.

அவரது இந்தப் பதிலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் ட்விட்டரில் கருத்திட்டு வருகிறார்கள்.

Views: - 37

0

0