தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு : மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் நிம்மதி…!!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 11:23 am
Quick Share

சென்னை ; தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்தை 90 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வருவதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. மேலும், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்தை 90 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு விரைவில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10 ஆயிரம் மெட்ரிக் டன், எம்எப்எல் நிறுவனம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 151

0

0