இயற்கை பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!!

13 November 2020, 6:01 pm
Quick Share

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4,382 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ரூ.4,382 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆண்டில் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.2,7,07.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.128.23 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.268.59 கோடியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 34

0

0