‘சீனாவாவது…பாகிஸ்தானாவது..!’ ரூ.8,722 கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்க மத்திய அரசு முடிவு..!

13 August 2020, 10:58 am
Quick Share

டெல்லி : அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், ராணுவ பலத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையின் ஆலோசனைக் கூட்டம், 11ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ராணுவ பலத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக, மேலும் ரூ.8,722 கோடி மதிப்பில் தளவாடங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு எச்டிடி-40 ரக விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏகே-203 ரக துப்பாக்கிகள் மற்றும் நவீன வசதி கொண்ட ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும். அதோடு, போர்க்கப்பல்களில் துப்பாக்கிகளை பொருத்துவதற்காக, அதிவிரைவு துப்பாக்கி தாங்கியை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0