காலாவதியான லைசென்ஸ், வாகன ஆவணங்களா..! அச்சம் வேண்டாம், புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!
24 August 2020, 5:17 pmகாலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை அதிகமாகக் கூடுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஆகவே, தங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
எனவே, பிப்.,1ம் தேதிக்கு பிறகு காலவதியாகும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடி காலம் செப்.,30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுவதால், ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்கும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவினால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.