தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!!

10 November 2020, 8:28 pm
Central Goverment Order-Updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மாநில அரசுகளுக்கான வருவாய் குறைந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதால் செலவு அதிகரித்தும் காணப்படுகிறது. எனவே, மாநில அரசுகள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.

அதன்படி, 6வது தவணையாக தமிழகம், கேரளா, இமாச்சல பிரதேசம் உள்பட 13 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடியும், இமாச்சல பிரதேஷ் மாநிலத்திற்கு ரூ.952.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 21

0

0

1 thought on “தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!!

Comments are closed.