இதுவரை 41.52 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது : மத்திய அரசு தகவல்

20 July 2021, 10:02 pm
Vaccine Stop- Updatenews360
Quick Share

டெல்லி : இந்தியாவில் இதுவரையில் 41.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அனைத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, மாநிலங்களுக்கு முன்பு கட்டணத்திற்கு வழங்கி வந்த தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதனால், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் டிசம்பர் மாதம் வரையில் 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது. மேலும், டிசம்பருக்கு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும என்பதில் மத்திய அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரையில் 41.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 31.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முதல் தவணையாக 32,85,33,933 பேருக்கும், 2வது தவணையாக 8,66,91,699 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 60

0

0

Leave a Reply