வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது : மத்திய அரசு பிடிவாதம்..!

3 September 2020, 7:42 pm
supreme_court_updatenews360 (2)
Quick Share

டெல்லி : வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகைகளை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின் பேரில், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கடன் தவணை தொகையை செலுத்தும் காலத்தை அதிகரித்ததோடு, கடன் மற்றும் வட்டி சுமை அதிகரிப்பதை சுட்டிக் காட்டிய பல்வேறு தரப்பினர், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் முடிவுகளை எடுக்க முடியாது என்றும், துறை ரீதியான பாதிப்பு வேறுபட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தவணைத் தொகை கட்டாதவர்களின் கணக்குகள், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Views: - 0

0

0