மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு..!!

Author: Rajesh
3 March 2022, 11:15 am
Quick Share

சென்னை: சென்னை விமானநிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பாலும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் விமான நிலையத்தின் கழிவறைக்கு சென்ற யஸ்பால், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
கழிவறையில் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதால், துப்புறவு பணியாளர்கள் கழிவறைக்குசென்று பார்த்தபோது, அங்கு யஸ்பால் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட யஸ்பால் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று, கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 370

0

0