மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை : ரூ.62 ஆயிரம் கோடியிலான சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!!

21 November 2020, 11:50 am
Amit_Shah_Updatenews360
Quick Share

சென்னை : பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்லும் அமித்ஷாவுக்கு, வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

14 இடங்களில் கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. லீல பேலஸ் நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர், மாலை 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்துக்கு அமித்ஷா வருகிறார்.

Chennai security - updatenews360

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கு விழாவில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து, ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

விழா முடிந்த பிறகு மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு அமித்ஷா செல்கிறார். அங்குதமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்க இருக்கிறார்.

Amit_Shah_UpdateNews360

இன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை 10 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும் பிரமுகர்கள் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதால், சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர். சென்னை விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம், அமித்ஷா தங்கும் ஓட்டல் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Views: - 25

0

0

1 thought on “மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை : ரூ.62 ஆயிரம் கோடியிலான சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!!

Comments are closed.