மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மீண்டும் தமிழகம் வருகை

7 March 2021, 9:26 am
Amit_Shah_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை பாஜக சந்திக்க இருக்கிறது. அந்தக் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக அதிமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதியாகவில்லை.

இந்த நிலையில், பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார்.

காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். அங்கு இருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் உள்ள இந்துக்கல்லூரி முதல் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை வரை வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற ரோடுஷோ நடத்துகிறார். பிறகு, கன்னியாகுமரி இடைத்தேர்தல் தொடர்பாக குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையை முடித்துக் கொண்டு மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Views: - 10

0

0