3 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

16 November 2020, 9:08 am
Heavy Rain Alert - Updatenews360
Quick Share

சென்னை: சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பகல் 12 மணிவரை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 25

0

0