உஷார் மக்களே….அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கும் எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 10:30 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

Punnagai | தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி கன மழை பெய்யும். மேலும், வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Mumbaikers, stay indoors! BMC issues heavy rainfall warning; high tides  likely today

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் 12ம் தேதி கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்து உள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இதனால், அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு வருகிற 12ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Views: - 195

0

0