இன்று 247 பேருக்கு கொரோனா…! இது செங்கல்பட்டு நிலவரம்

22 July 2020, 1:59 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சம் பெற்று வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10,536 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 7,515 ஆக இருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனையில் 2564 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சிகிச்சை பலனின்றி 207 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மொத்தமாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,000த்தை கடந்துவிட்டது.