இ-பாஸ் தளர்வு எதிரொலி : சென்னையில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேருக்கா..!!

19 August 2020, 7:24 am
Quick Share

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ஒரே நாளில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இ-பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறையில், கடந்த 17ம் தேதி முதல் தளர்வுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதாவது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் இ-பாஸை விண்ணப்பித்து சென்று வருகின்றனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாமல் நிம்மதியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வர நேற்று மட்டும் 14,300 பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0