அம்பத்தூர் காவல்நிலையத்தில் திடீர் விசிட் அடித்த CM ஸ்டாலின்…. திகைத்துப் போன போலீஸ் அதிகாரிகள்… (வீடியோ)

Author: Babu Lakshmanan
15 April 2022, 8:12 pm
Quick Share

சென்னை அம்பத்தூரில் உள்ள காவல்நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார்

சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்று காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், திரும்பும் வழியில் அம்பத்தூரில் உள்ள டி1 காவல்நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

Views: - 761

0

0