ஆட்சிக்கு வந்த ஆணவம்… அம்மா உணவகத்தை அடித்து உடைத்த திமுகவினர் : திகைத்து போன உணவருந்த வந்த பொதுமக்கள்..!!!

4 May 2021, 11:56 am
amma unavagam attack - updatenews360
Quick Share

சென்னை : தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் 7ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில், திமுகவினரின் அராஜகம் தொடங்கியிருப்பது பாமர மக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்முறையாக முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக நிர்வாகிகளான உதயநிதி ஸ்டாலின், ஆ. ராசா உள்ளிட்டோர் போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு வெளிப்படையாகவே பகிரங்க மிரட்டல் விடுத்து வந்தனர்.

udhayanidhi stalin - updatenews360

அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தமிழகம் மீண்டும் கலவர பூமியாகும் என அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், ஸ்டாலின் முதலமைச்சராக கூட இன்னும் பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை, தொடர்ந்து நிறைவேற்றுவது புதிய அரசின் நடவடிக்கையாக இருக்கும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது பெரும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், திமுகவினர் இந்த செயல் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுகவினர் ஆட்டம் ஆரம்பாகிவிட்டதாகவும், ஆட்சிக்கு வந்த ஆணவத்தில் இதுபோன்று செய்து வருவதாகவும், மக்களுக்கான விடியல் தொடங்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Views: - 219

1

0

Leave a Reply