இந்தியாவிலேயே முதல் தொடர் கொரோனா கண்காணிப்பு மையம் : சென்னையில் திறப்பு!!

19 August 2020, 4:08 pm
Vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட கோவிட்-19 தொடர் கண்காணிப்பு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தான் covid-19 தொடர் கண்காணிப்பு மையம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மையம் இதற்கு முன்பு அம்மா முழு உடல் பரிசோதனை மையமாக செயல்பட்டு வந்தது, இதனை தற்காலிகமாக covid-19 தொடர் கண்காணிப்பு மையமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஏற்கனவே உடல்நிலை குறைவு ஏற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து சென்றவர்களை தொடர்பு கொண்டு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என சிகிச்சை முடிந்து சென்ற நாள் முதல் தொடர்ச்சியாக 25 நாட்களுக்கு கண்காணிக்கப்படும். மேலும் மீண்டும் அவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏதேனும் ஏற்பட்டால் அவர்களை இந்த மையத்திற்கு அழைத்து வந்து தேவையான சிகிச்சை தரப்படும் என கூறப்படுகிறது,

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- இந்தியாவிலேயே முதல் முறையாக குணமடைந்து நோயாளிகளை கண்காணிக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி covid-19 குணமடைந்த நோயாளிகளை கண்காணிக்க, தொடர்ந்து கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்தில் கண்காணிக்கவே இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பில் அவசர சிகிச்சைப் பெற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பலனடையலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தாலும் அவர்கள் இங்கே வந்து பயன் அடையலாம். இந்த மையத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மதுரையிலும் இது ஆரம்பிக்கப்படும்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சேவை மனப்பான்மையோடு தனியார் மருத்துவர்கள் ஈடுபடவேண்டும். அதிக பணம் வசூலிப்பதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்றுதான் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, இ-பாஸ் தளர்வுகளுக்கு பிறகு வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் வரும் நபர்களுக்கு எந்த மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் அனுமதிப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- நோய்த் தொற்றையும் தடுக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களின் நலனை கருதவேண்டும். முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கைகளை கழுவுவது சிவ கவசம் அணிவது உள்ளிட்டவைகளை கடைபிடித்தால் நோய் தொற்று நோய் தடுக்க முடியும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது, என்றார்

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல்நிலை குறித்து கேட்டபொழுது, “அவரின் குடும்பத்தாருடன் பேசினேன். மருத்துவர்களிடமும் கேட்டறிந்தேன். செயற்கை சுவாசம் கொடுத்தாலும், தற்போது அவர் சீராக உள்ளார்,” என்று கூறினார்.

Views: - 29

0

0