ப்ப்ப்பா… எப்படியெல்லாம் கடத்துறாங்கயா…! மசாலா தூள் பாக்கெட்டில் போதைப்பொருள் கடத்தல் : 4 பேர் கைது..!

14 October 2020, 3:30 pm
chennai arrest 2- updatenews360
Quick Share

சென்னை : மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து போதைப் பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக, விமான நிலையங்களில் வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்களை கடத்த முயன்ற கும்பல் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பொருளை எடுத்துச் செல்வது யார் என்பது குறித்து விசாரித்ததில், முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கொண்ட கும்பலை, போதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து வைத்து போதைப் பொருளை பயணிகள் கடத்த முயன்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 93

0

0