தப்பியது சென்னை… சிக்கியது அந்த ஒரு மாவட்டம் ; வானிலை மையத்தின் அறிவிப்பால் பொதுமக்கள் பீதி..!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 1:38 pm
Quick Share

சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்தும், கார் உள்ளிட்ட வாகனங்களை வெள்ள அடித்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

அதேவேளையில், அநாவசியமாக பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. இது சென்னை மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூருக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.

Views: - 238

0

0