மொழி பேரினவாத சக்திகளை தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து..!

19 September 2020, 6:05 pm
Chennai_High_Court (1)
Quick Share

மொழி பேரினவாத சக்திகள் தலையெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கலைலிங்கம் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கலைலிங்கத்தின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நாட்டில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. எனவே, மொழி குறித்த அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி, சில அரசியல் கட்சிகள் மாநிலத்தில் அசாதாரண சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1967க்கு பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மொழி பேரினவாதத்திற்கு இடம் தரக்கூடாது இதுபோன்று சக்திகள் தலையெடுக்க அனுமதிக்க கூடாது. மொழிகள் தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது, எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி மொழியை எதிர்த்து தி.மு.க. போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீதிபதி இந்த கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0