நளினி, முருகன் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய பேச போறாங்க..? ஹைகோர்ட் சரமாரி கேள்வி

12 August 2020, 3:00 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை: நளினியும், முருகனும் உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர, அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நாட்டையே உலுக்கிய ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். அவர்களில் நளினியின் தாயார், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி தர வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்கை விடுத்து இருந்தார். வழக்கு  நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினியும், முருகனும் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? குடும்பத்தினருடன் காணொளி வாயிலாக பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறைபாடு? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது: இருவரும் பேசுவது பல்நோக்கு விசாரணை அமைப்பின் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை தற்போது இயங்குகிறதா? என வரும் 19ம் தேதிக்குள் விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Views: - 0

0

0