சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை : போலீசார் விசாரணை

21 October 2020, 12:17 pm
mambalam police - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் செயல்பட்டு வரும் நகைக் கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைகள் வழக்கத்தை விட முன்னதாகவே அடைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளைடியத்துள்ளனர். கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை அள்ளிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 21

0

0