மானம், ரோஷம் இருக்கா..? எஸ்.வி. சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் ‘நச்’ கேள்வி

5 August 2020, 2:57 pm
Minister jayakumar-- updatenews360
Quick Share

சென்னை: மானம், ரோஷம் ஏதாவது இருக்கா என்று எஸ்வி சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் ‘நச்’ கேள்வி கேட்டுள்ளார்.

நாடு முழுவதும் சில நாட்களாக புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் அது தொடர்பான விவாதங்கள் முன் எடுக்கப்பட்டன.

புதிய கல்விக் கொள்கையையும், அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கையையும் நிராகரிக்குமாறு தமிழக அரசை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. இது குறித்து ஆலோசித்த தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தமிழகத்தில் என்றுமே இருமொழிக் கொள்கைதான், மும்மொழிக் கொள்கைக்கு வாய்ப்பு இல்லை என்று செய்திகுறிப்பு வெளியிட்டது. இந்த கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியது.

இதை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றன. இந் நிலையில் பாஜகவின்  எஸ்வி சேகர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதிமுக உருப்பட வேண்டும் என்றால் அக்கட்சியின் கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று கட்சி பெயரை வையுங்கள் என்று பேசி இருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறி இருப்பதாவது: மானம், ரோஷம் உள்ளவராக எஸ்வி சேகர் இருந்தால் அதிமுக எம்எல்ஏவாக அவர் இருந்த போது 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம், பென்ஷனை திருப்பி தரவேண்டும். அவரின் விளம்பர பேச்சை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.

Views: - 14

0

0