சென்னையில் வரும் 27ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை…! காவல்துறை உத்தரவு
12 August 2020, 9:55 pmசென்னை: சென்னையில் வரும் 27ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. ஆனாலும் பல நிபந்தனைகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் போராட்டம் நடத்த மார்ச் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வரும் 27ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சென்னையில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம் நடத்துதல், ஒன்று கூடுதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், பேரணி ஆகியவை நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.