எழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 11:08 am
police exhibition1 - updatenews360
Quick Share

சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை 2வது அருங்காட்சியமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, ரூ.7 கோடியில் சுமார் 46 ஆயிரம் சதுஅடி பரப்பளவில் இரு தளங்களுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

அதில், காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், பதக்கங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுதந்திரத்திற்கு பிறகும், முன்பும் தமிழகம் சந்தித்த முக்கியத் தருணங்களையும், அதில் காவல்துறையின் பங்கையும் விளக்கும் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார். அப்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கான ஆவணங்களை அவர் பார்வையிட்டார்.

Views: - 127

0

0