நிவர் புயலால் நிரம்பும் ஏரிகள் : காஞ்சிபுரம், செங்கல்பட்டுவில் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

25 November 2020, 5:17 pm
adaiyaru - rain - updatenews360
Quick Share

சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடக்கவிருக்கிறது. இதனால், இன்று இரவு 8 மணி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், நேற்று முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு ஏரிகள் திறப்பால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செம்பரம்பாக்கம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், பெருங்களத்தூர், நந்திவரம் உள்பட 20 கிராம மக்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0