சென்னை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கம் : வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு..!

5 September 2020, 6:57 pm
chennai train emu - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் இருந்து வரும் 7ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படும் என்ற தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் 4வது கட்ட தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. அதன்படி, அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்து வந்த சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை வரும் செப்.,7ம் தேதி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செப்.,7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்ற அறிவிப்புக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0