சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை : 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்

5 July 2021, 4:13 pm
SBI Case Arrest - Updatenews360
Quick Share

சென்னை ; சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்த நிலையில், 30 வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் சென்னையை சுற்றியுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு அரியானாவில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து, 4 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

4வதாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனிடையே, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வங்கி ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சென்னை போலீசார் 30 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

தற்போது முதல் முறையாக இந்தியாவிலேயே இந்த வடமாநில கொள்ளை கும்பலை சென்னை போலீசார் தான் கைது செய்துள்ளது.

Views: - 144

0

0