5 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு : குஷியில் குடிமகன்கள்..!

18 August 2020, 10:40 am
tasmac chennai - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா ஊரடங்கினால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னை மாநகரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சராசரியாக நாளொன்று 6,000 என்கிற நிலையில் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நாள்தோறும் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால், பிற மாவட்டங்களில் அளிக்கப்பட்ட தளர்வுகளை, சென்னைக்கு மட்டும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடித்து படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தன.

அதேபோல, மே மாதமே டாஸ்மாக் கடைகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட நிலையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை மண்டலத்தில் 720 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Views: - 33

0

0