மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி..!

Author: Babu
3 October 2020, 1:50 pm
dmk mla ranganathan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களையும் கொரோனா தாக்கி வருகிறது. அப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையின் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தொற்றிற்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 53

0

0