காபி தூளினால் 74 விதமான காந்தியின் உருவப்படும் : சென்னை இளைஞரின் கின்னஸ் முயற்சி..! (புகைப்படம் உள்ளே)

15 August 2020, 4:18 pm
gandhi - updatenews360
Quick Share

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி, முழுக்க முழுக்க காபி தூளினை மட்டுமே பயன்படுத்தி, மகாத்மா காந்தியின் பிரமாண்ட உருவப்படத்தை வரைந்த இளைஞரின் முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று இந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு விதமாக, சுதந்திர போராட்டத் தியாகிகளை பல்வேறு தரப்பினர் கவுரப்படுத்தியும், நினைவுபடுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் முயற்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவராமன். இன்று கொண்டாடப்பட்டு வரும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, 2020 ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக, 2020 சதுர அடி கொண்ட துணியில், 74வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில், 74 விதமான மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார். இதனை வரைய அவர் 24 மணி நேரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டார்.

முழுக்க முழுக்க காபி தூளை கரைத்து கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்தி மட்டுமே வரையப்பட்டுள்ள இந்த உருவப்படத்திற்கான முயற்சி, கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் காபி தூள் கரைசலின் மூலம் 1,704 சதுர அடியில் அந்நாட்டு வரைப்படத்தை வரைந்ததே உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 53

0

0