பெற்றோர்களே உஷார்…சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த பரிதாபம்: ஹோட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது!!

Author: Aarthi Sivakumar
11 September 2021, 8:55 am
Quick Share

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்ததையடுத்து கடையின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சாலை பகுதியில் செவன் ஸ்டார் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. காதர் பாஷா என்பவர் இந்த பிரியாணி கடையை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இங்கு தந்தூரி பிரியாணி சாப்பிட்ட ஏழு பேருக்கு தீராத வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஓட்டலில் சிக்கன் தந்தூரி பிரியாணி சாப்பிட்டதாக ஆரணி லஷ்மி நகர் பகுதியை சேர்ந்த நான்கு பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 வயது சிறுமி லோசனா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரணி 7 ஸ்டார் பிரியாணி கடையில் தந்தூரி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 21 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்த ஆரணி கோட்டாட்சியர் கவிதா மற்றும் போலீஸ் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கடையை ஆய்வு செய்தனர்.

கெட்டுப்போன சிக்கன் சமைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பொருள் கலக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பிரியாணி கடையில் தந்தூரி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததால் கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 334

0

0