அண்ணாசாலையில் காரை நிறுத்திய முதலமைச்சர்: மக்களுக்கு மாஸ்க் வழங்கி அறிவுரை..!!
Author: Aarthi Sivakumar4 January 2022, 5:43 pm
சென்னை: முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்களை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின் முகக்கவசம் அணிவித்து அறிவுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனாலும், சிலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதாக சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கையில் பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், சாலையில் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றதை கவனித்து, சாலையில் இறங்கி முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு தானே முகக்கவசத்தை மாட்டிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அங்கிருப்பவர்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார். மேலும், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
0
0