108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி…!!

12 November 2020, 1:03 pm
cm inagurted - updatenews360
Quick Share

சென்னை: அவசர கால மருத்துவ ஊர்தி சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 1,005 அவசர ஊர்திகள் இயங்கி வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்த தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் , 108 அவசர கால ஊர்தி சேவைக்காக , 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசரகால ஊர்திகளை கூடுதலாக கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

நடப்பாண்டில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசர கால ஊர்திகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

முதல்கட்டமாக 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 ஆம்புலன்ஸ் வாகன சேவையை கடந்த ஆகஸ்டு மாதம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், 2ம் கட்டமாக இன்று 24 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 108 ஆம்புலன்ஸ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Views: - 36

0

0