கன்னியாகுமரியில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகள்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்…!!

10 November 2020, 3:47 pm
cm kanyakumari - updatenews360
Quick Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து 2,736 பயனாளிகளுக்கு ரூ.54.22 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Views: - 18

0

0