ஆய்வுப் பணிகளில் அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி: செம்மஞ்சேரியில் இன்று கள ஆய்வு…!!

30 November 2020, 9:21 am
cm inspection - updatenews360
Quick Share

சென்னை: மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 26ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இந்த நிவர் புயல் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி சென்றது.

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூருக்கு சென்று நேரில் பார்வையிட்டார். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தற்போது வரை வடியவில்லை.

மழை நீர் தேங்கிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் நேரில் ஆய்வு செய்கிறார். செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

Views: - 0

0

0