ஒவ்வொரு கம்பத்தையும் எடுத்து நிறுத்தி பாருங்க…உழைச்சா தான் அந்த உழைப்பு தெரியும்: எடப்பாடியாரின் நிதான பதில்…!!

26 November 2020, 9:00 pm
cm on cudalore - updatenews360
Quick Share

கடலூர்: நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, கடலூர் மாவட்டத்திற்கு 1000 மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காலையில் இருந்து இயல்புநிலை திரும்பியும் பணி முடியவில்லை என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும், சுவிட்ச் இருக்கா? ரிமோட் கண்ட்ரோலா? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்குறதுக்கு….ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க? நீங்க போங்க ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க? எவ்ளோ நேரம் ஆகும் என்று தெரியும்.உழைச்சாதான் அந்த உழைப்பு தெரியும் என பதில் தந்தார்.

மேலும், ஒரு மின்கம்பத்தை எடுத்து அதுல வயர் மாட்டி வைத்தும் எல்லாம் சரி ஆகிவிடாது, நிறைய மரங்கள் இருக்கும், மரத்தின் மேலே கிளைகள் விழுவதால் எர்த் அடிக்கும். இதெல்லாம் பார்த்து தான் வேலை செய்ய முடியும்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் இந்த புயல் எதிர்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு செய்யுங்க, மின்சாரம் மிக ஆபத்தானது. ஒவ்வொருவரின் உயிர் ரொம்ப முக்கியம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 23

0

0